கடற்கரை பாகங்களில் அலையின் வேகம் அதிகரிப்பு- வளிமண்டலவியல் எச்சரிக்கை!

நாட்டின் பல கடற்கரை பாகங்களில் எதிர்வரும் 24 மணி நேரங்களுக்கு அலையின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு மீனவர்களும் கடற்படையினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இன்று காலை 5.30 அளவில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரை, யாழ். தொடக்கம் திருகோணமலை வரை மற்றும் மன்னார் வலைகுடா பகுதிகளில் அலையின் வேகம் அதிகரிக்கக் கூடும் என அவ்வறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50-60km/h வரை காணப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :