உலக கெசினோ மன்னன் ஜேம்ஸ் பெக்கருக்கு பத்து வருடகால வரி நிவாரணம் வழங்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பிளர் ஹர்ச டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி உலகிலேயே கெசினோ வர்த்தகர்கருக்கு வரி நிவாரணம் வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (18) இரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறித்த வரி நிவாரணம் தொடர்பில் தகவல் அடங்குவதாக கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஹர்ச டீ சில்வா தெரிவித்தார்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அவர் ஏளனம் செய்துள்ளார்.
நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கு வரிக்கு மேல் வரி விதித்து அவர்களை கஸ்டத்தில் தள்ளியுள்ள அரசாங்கம் கெசினோ வர்த்தகருக்கு வரி நிவாரணம் வழங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
தேசிய முதலீட்லாளர்களுக்கு வரி நிவாரணம் வழங்காது சர்வதேச வர்த்தகருக்கு வரி நிவாரணம் வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு தேசிய வர்த்தகர்களை முன்னேற்றும் எண்ணம் இல்லை என ஹர்ச டீ சில்வா சுட்டிக் காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment