யாழ். பல்கலைக்கழக மாணவிகள் தங்கிருந்த வீட்டுக்கு இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கை மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
குறித்த வீட்டுக்கு நேற்று (20) நள்ளிரவு மது போதையில் சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன் வாயில் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர்.
கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளார்கள் .
இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் சிதறியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவிகளால் அறிவிக்கப்பட்டதை அடுத்து நிர்வாகத்தினால் அங்கு தங்கியிருந்த 16 தென்னிலங்கை மாணவிகளும் பாதுகாப்பாக யாழ். பல்கலைக்கழக விடுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்கள்.
அதேவேளை இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment