வடக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடையாது: - பசில் ராஜபக்ஷ


டக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் 1988 இல் ஈபிஆரெல் எவ் இனர் ஓர் ராணுவத்தை அமைத்தது போன்று மீண்டும் ஒரு அசாதாரண சூழல் ஏற்படும். ஆகாவே மாகாண பொலிஸ் அதிகாரங்களின் அடிப்படையில் தனியான இராணுவ அலகுகளை உருவாக்க எவ்வித சாத்தியமும் கிடையாது என சிறிலங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 'தி ஹிந்து' பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாகாண இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடையாது என 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பசில் குறிப்பிட்டார். 1988ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சித்ததாக பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் மீளவும் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படாது என்பதனை தின்னமாக குறிப்பிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே மாகாணசபைகளுக்கு முழு அளவில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :