கல்லடி பாலத்தில் முதன்முறையாக விபத்து களியாண மாப்பிளை வைத்தியசாலையில்


ட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் முதன்முறையாக விபத்து ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் வந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் முச்சக்கர வண்டியில் வந்தவர் இன்று (06) திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கல்லடிப்பாலம் திறந்து வைக்கப்பட்டு நான்கு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் முதலாவது விபத்தாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :