சிக்கலில் வடிவேலுவின் தெனாலிராமன்?


ரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தில் கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு.

பட்டாபட்டி படத்தை இயக்கிய யுவராஜ் படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் 22 நாட்கள் நடைபெற்றது. அதையடுத்து படப்பிடிப்பு நடைபெறுவதற்கான அறிகுறிகளே இல்லை.

இதுபற்றி அப்பட யூனிட் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது, படப்பிடிப்பு நடந்தபோது சில பிரச்னைகள் ஏற்பட்டு விட்டது என்கிறார்கள். என்ன காரணம் எனறால், தினமும்9மணி படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் ஸ்பாட்டில் தலைகாட்டினார் வடிவேலு. 

இதுமாதிரி இன்னும் சில பிரச்னைகள் நடந்தது. இதனால் தயாரிப்பாளர் தரப்புக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது. 

இப்படியே போனால் படத்தின் பட்ஜெட் எகிறி விடும். அதனால் வடிவேலுவையும் ஒரு பார்ட்னராக இழுத்தால்தான் சிக்கனமாக படப்பிடிப்பு நடக்கும் என்று முடிவெடுத்தார்களாம்.

சில நாட்களுக்குப்பிறகு வடிவேலுவை அழைத்து, படத்தை மேற்கொண்டு வளர்ப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தயாரிப்பில் நீங்களும் ஒரு பங்குதாராக வரவேண்டும் என்று கண்டிசன் போட்டார்களாம். 

இதனால் அதிர்ந்து போன வடிவேலு, அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லையாம். இதோ வருகிறேன் என்று போனவர் போனவர்தானாம். 

இன்றுவரை கம்பெனி பக்கம் தலைகாட்டவும் இல்லையாம். அவர்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவும் இல்லையாம்.

வடிவேலு மெளனம் கலைப்பாரா? தயாரிப்பாளர் அரிதாரம் பூசுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :