தம்புள்ளைப் பள்ளிவாசலைச் சூழவுள்ள முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற வேண்டும்

ம்புள்ளை பள்ளிவாசலையைச் சூழவுள்ள 22 குடும்பங்களையும் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை நேற்று வெள்ளிக்கிழமை (19.07.2013) கடிதம் அனுப்பியுள்ளதாக கிராமவாசி ஒருவர் மீள்பார்வைக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 60 பேர்ச் காணி மற்றும் வீட்டைக் கொண்ட வை.எம். சலீம் என்பவருக்கு 9750 ரூபா நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு வருமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு 7 நாட்களுக்குள் வெளியேறாதபோது அப்பிரதேசத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தம்புள்ளைப் பள்ளிவாயல் குறித்து கேட்டபோது, பள்ளிவாசலுக்கு எவ்விதக் கடிதமும் இதுவரை வரவில்லை. ஏனெனில், அவர்கள் இதனை ஒரு பள்ளிவாயலாக ஏற்றுக் கொள்ளவில்லையாம் எனவும் தெரிவித்தார்.

ஆனால், இப்பள்ளிவாசல் 1960 ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவருவதாகவும், 1990 ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளிவாசலுக்கான மின்சார கட்டணப் பட்டியல் வருவதோடு, 2002 ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளிவாசல் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் பதியப்பட்டு இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, உரியவர்கள் இது குறித்து உடனடியாக கவனமெடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :