SLMC அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவிற்கான கிளைக்குழு ஆரம்பம்.






(எம்.பைஷல் இஸ்மாயில்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவு கிளை அங்குரார்ப்பனம் மற்றும் இப்தார் நிகழ்வும் இன்று (2013.07.20) அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவில் நஸீர் (னுஐபு) யின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு கட்சியின் உச்ச பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உயர்பீட உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், பிரதேச சபை உறுப்பினர்களான அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண உதவி ஆணையாளர் எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், உயர் பீட உறுப்பினர் ஐ.எம்.வாஹீட் , இளைஞர் காங்கிரஸ் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஆசிரியர் பி.ரி.இக்பால், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.எம்.காதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவு கிளைக்குழுத் தலைவராக ஐ.எல்.எம்.நஸீர் (னுஐபு), செயலாளராக ஊடகவியலாளர் ஏ.எல்.றமீஸ் உள்ளிட்ட நிருவாக குழுத் தெரிவைத் தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் நஸீரினால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட செயலாளர் றமீஸீடம் கிளைக்குழு தொடர்பான ஆவணங்களை கையளித்து வைத்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :