(ஏ.எல்.றமீஸ்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை 09 ஆம் பிரிவு இரண்டாம் கிளை அங்குரார்ப்பன நிகழ்வு நேற்று (18) அட்டாளைச்சேனை புறத்தோட்டத்தில்; கட்சியின் உச்ச பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது 11 உறுப்பினர்களைக் கொண்ட நிருவாக சபை தெரிவு செய்யப்பட்டதுடன் கிளைக்குழுத் தலைவராக ஊடகவியலாலர் எஸ்.எம்.அறூஸ் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வுக்கு உயர் பீட உறுப்பினர் ஐ.எம்.வாஹீட் இளைஞர் அணித் தலைவர் பி.ரி.இக்பால், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஏ.பி.எம்.காதர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment