10 லட்சம் வழிப்பறி செய்து விட்டதாக நாடகமாடிய வியாபாரியை கைது செய்ய நடவடிக்கை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பி.கஸ்பா பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது37). செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் வெங்கட சமுத்திரம் பகுதியில் காலி இடத்தை வாங்குவதற்காக வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பகுதியில் உள்ள ஒரு நண்பரிடம் ரூ.10 லட்சம் ரொக்க பணம் வாங்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆம்பூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள குறுக்கு தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள் அவரை தாக்கி விட்டு பணத்தை பறித்து சென்று விட்டதாக கூறி முரளி ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து டவுன் போலீசார் நகர் முழுவதும் தேடுதலில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர். புகார் கொடுத்த முரளியிடம் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் விசாரணை நடத்தினார்.

எனினும் பணம் பறிக்கப்பட்டதை போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை. அதனால் போலீசார் பணத்தை கடன் கொடுத்ததாக கூறப்படும் நபரிடம் விசாரணை நடத்த முரளியை உதயேந்திரத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த தகவல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் முடுக்கி விடப்பட்டனர். ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே முரளியுடன் உதயேந்திரம் சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முரளி ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை வழிப்பறி செய்து விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

இதனையறிந்த போலீசார் திடுக்கிட்டனர். ஏன் பொய் புகார் கொடுத்து போலீசாரை அலைக்கழிக்க வேண்டும் என்ற ஆவேசத்துக்கு உள்ளானார்கள். செல்போன் வியாபாரி முரளி மீது கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணத் தகராறு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது பணம் வழிப்பறி செய்து விட்டதாக நாடகமாடியுள்ளார். யார் மீதாவது பொய் வழக்கு தொடர நாடகமாடினாரா? அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முரளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :