மிருகங்களை வேட்டையாடி வந்த 13 அடி இராட்சத முதலை இறந்த நிலையில் கண்டுபிடிப்பு-படங்கள்


பழுலல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி-1 தி.எஸ். ஊர் வீதி ஆற்றங்கரை கரையோரப்பகுதியில் ஆடு,மாடு,நாய் போன்ற மிருகங்களை வேட்டையாடி வந்த 13 அடி இராட்சத முதலையை இறந்த நிலையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலய அதிகாரிகளினால் காத்தான்குடி பொலிசாரின் உதவியுடன் 26-01-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப் பகுதி மக்கள் காத்தான்குடி பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்தே மேற்படி முதலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இம் முதலைக்கு 12 வயது என்றும் இதனை வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் வைத்திய பரிசோதனையின் பின்னரே இம் முதலை இறந்த காரணத்தை கண்டறியமுடியுமென்றும் இம் முதலையின் வாயினுல் பாரிய தூண்டல் காணப்பட்டதாகவும் மட்டு –மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த முதலையை பார்வையிட ஆரையம்பதி,காத்தான்குடி பகுதிகளிலிருந்து பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :