பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கல்முனை தொகுதிக்கு ரூபா. 161 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளார் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் கல்முனைத்தொகுதி அபிவிருத்திக்கான விஷேட கூட்டம் நேற்று . 24.01.2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு-07 ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இவ்விஷேட கூட்டத்திற்கு கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் தலைமையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுத்தலைவருமான ஏ.எம். ஜெமீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, ஏ.ஏ. பஷீர், எம்.எல். சாலிதீன், ஏ.எம். றியாஸ், இஸட். ஏ. றகுமான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிதிகள் கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் பிரதேச இணைப்புக்குழு ஊடாக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பாக இந்நிதி சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை பிரதேச செயலகம், கல்முனை தமிழ் பிரதேச செயலகளுக்குட்பட்ட ஊர்களுக்கான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றும் இவ் அபிவிருத்திப் பணிகள் யாவும் ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து கிராமிய வீதிகள் அமைத்தல், பாலங்கள், விவசாயம், கிணறுகள் அமைத்தல், சனசமூக நிலையங்கள் கட்டுமானம்,, கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் கட்டிடங்கள் அமைத்தல், வடிகான்கள் அமைத்தல், மின்னிணைப்புக்களை பெற்றுக் கொடுத்தல், மயாணங்கள் புரணமைத்தல் மற்றும் நீர் விநியோகம் பெற்றுக் கொடுத்தல் போன்றவைகளுக்குப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக தனியாருக்கான அபிவிருத்திகள், மதஸ்தானங்களின் அபிவிருத்திகள் மற்றும் அரச தேவைகளுக்காக கொள்வனவு செய்யப்பட்ட நிலங்களுக்கான கொடுப்பனவுகளுக்கு இந்நிதியினை பயன்படுத்தாமல் பயனாளிகளாக இருக்கும் மக்கள் விரும்பும் அனைத்துவிதமான அபிவிருத்திப் பணிகளுக்கும் இந்நியினை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
2014ம் ஆண்டிலிருந்து கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இதற்கான முழுப் பொறுப்பினையும் எடுக்க வேண்டும் எனவும், அதன் செயலாளராக பிரதேச செயலாளரும், மாகாண சபை உறுப்பினர்களும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும், ஏனைய திணைக்கங்கள அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவாக அபிவிருத்திக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படல் வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.
இவ்வாண்டிலிருந்து வட்டாரங்களின் மக்கள் பிரதிநிதி அவ்வட்டாரத்துக்குரிய தலைவராகவும், செயலாளராக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரும், உறுப்பினர்களாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், பாடசாலை அதிபர்கள், கிராம சேவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிகள் மற்றும் சமூகத்தலைவர்கள் உள்ளப்படல் வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment