சம்மாந்துறை தெகுதி அவிவிருத்திக்காக 177 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு -நெளஷாத்


எம்.ரீ.எம்.பர்ஹான்-

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தலைமையில் சம்மாந்துறை தொகுதி அவிருத்தி தொடர்பான விஷேட கூட்டம் கடந்த 24ம் திகதி கொழும்பு ஹெக்டர் கொபேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிலையத்தில்; இடம் பெற்றது.

இக் கூட்டத் தொடரில் சம்மாந்துறை தெகுதி அவிவிருத்திக்காக 177 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்கள் தெரிவித்தார்கள்.

இன் நிதியை கொண்டு சம்மாந்துறை பிரதேச செயலகம், நாவிதன் வெளி பிரதேச செயலகம், இரக்காமம் பிரதேச செயலகம் ஊடாக கிராமங்களுக்கான வீதி மற்றும் பாலங்கள், கிணறுகள், சனசமூக நிலையங்கள், வடிகான்கள், மின் இணைப்பு, நீர்விநியோகம், மயான புனரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன் நிதியை ஒதுக்கீடு செய்து தந்தமைக்காக சம்மாந்துறை தெகுதி மக்கள் சார்பாக கௌரவ ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :