நடுவானில் மயக்கமடைந்த விமானி - விமானத்தை தரையிறக்கிய 19 வயது இளைஞன்!!

குட்டி விமானத்தில் குதுகல பயணம் மேற்கொண்டபோது விமானி மயங்கியதால் உடன் சென்ற இளைஞர் விமானத்தை 45 நிமிடங்கள் இயக்கிய பின் பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் போர்ப்ஸ் நகர விமான நிலையத்திலிருந்து செசன்னா-150 என்ற குட்டி ரக ஒற்றை இன்ஜின் விமானம் நேற்று புறப்பட்டது. அதை தேரக் நெவிலி (61) என்ற பைலட் இயக்கினார்.

உடன் ட்ராய் ஜென்கின்ஸ் (19) என்ற இளைஞனும் சென்றான். இருவரும் அடிக்கடி இந்த குட்டி விமானத்தில் பயணம் மேற்கொள்வது வழக்கம். அப்போது விமானம் ஓட்டுவது பற்றி அரைகுறையாக ஜென்கின்ஸ்க்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

விமானத்தில் நேற்று பறந்து கொண்டிருந்தபோது விமானி நெவிலிக்கு திடீர் என மயக்கம் ஏற்பட்டது. நிலைமையை உணர்ந்த ஜென்கின்ஸ் விமானத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். விமானத்தை இயக்குவது பற்றி தெரிந்திருந்தாலும் அதை தனியாக தரையிறக்கும் அளவுக்கு ஜென்கின்ஸ் பயிற்சி பெறவில்லை.

ஒரே ஒரு முறை நெவிலி மேற்பார்வையில் விமானத்தை தரையிறக்கி உள்ளான். இதனால் ஹெல்ப் ஹெல்ப் என விமானத்தில் உள்ள ரேடியோ மைக்கில் கத்தினான் ஜென்கின்ஸ்.

இதைகேட்டு மற்றொரு விமானத்தில் பறந்து கொண்டிருந்த பால் ரெனால்ட்ஸ் என்ற விமானி குட்டி விமானத்தின் அருகில் பறந்தபடி ரேடியோ மூலம் ஜென்கின்ஸ்க்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

அதனால் 2 ஆயிரம் அடி உயரத்தில் விமான நிலையத்தை சுற்றி விமானம் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

விமானம் விபத்துக்குள்ளானால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட ஒரு குழுவினர் தயாராக இருந்தனர். இந்நிலையில் விமானி நெவிலிக்கு மயக்கம் தெளிந்தது.

அவரது அறிவுறுத்தலின்படி விமானத்தை, விமான நிலைய ஓடுபாதையில் பத்திரமாக தரையிறக்கினான் ஜென்கின்ஸ்.விமானத்தை இயக்குவது பற்றி சிறிதளவு தெரிந்திருந்தாலும் தைரியமாக செயல்பட்ட வாலிபரை பொதுமக்கள் பாராட்டினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :