சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட 200 மேற்பட்ட விண்ணப்பங்கள்

திர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் வேட்புமனுக் குழு இன்று கூடவுள்ளது

இந்தக் கூட்டம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பினைக் கோரி இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

எவ்வாறாயினும், குறித்த இரண்டு மாகாணங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 25 வேட்பாளர்களை மாத்திரமே நிறுத்த முடியும் என கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளவர்களின் கல்வி பின்புலம், பிரபல்யம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி வேட்பாளர் தெரிவை எதிர்வரும் 27 ஆம் திகதி நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :