ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ்; கடெற் பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு -படங்கள்


பழுலுல்லாஹ் பர்ஹான்-

வுஸ்திரேலியா அரசாங்கத்தினால் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 2014 ஜனவரி மாதம் கடந்த 12 தினங்கள் சிறப்பாக இடம்பெற்ற ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ்; கடெற் பயிற்சிப் பட்டறை கடந்த வாரம் நிறைவு பெற்றதாக இலங்கையிலிருந்து அப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு நாடு திரும்பிய சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிபு தெரிவித்தார்.

கனடா,இங்கிலாந்து,ஹொங்கோங்,மலேசியா,நியூஸ்லாந்,சிங்கபூர், சாலமன்தீவுகள், சௌத்தாபிரிக்கா, இலங்கை,வேல்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய 11 உலக நாடுகள் பங்கு கொண்ட சர்வதேச இப் பயிற்சிப் பட்டறையில் பல்வேறு வகையான முதலுதவி பயிற்ச்சிகள் வழங்குவது தொடர்பான பயிற்ச்சிகள் வழங்கப்பட்டதுடன் வினோதமான முறையில் பொழுது போக்கு நிகழ்வுளும் இடம்பெற்றன.

இவ் சர்வதேச பயிற்சிப் பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு அவுஸ்திரேலியா ஸ்டாண்வேல் டொப் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற போது சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் சார்பாக சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டு-மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிபுவினால் 2014 சர்வதேச சென் ஜோன்ஸ்; கடெற் பயிற்சிப் பட்டறையின் நிறைவேற்று அதிகாரி போள் கொம்டனுக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இப் பட்டறையின் இறுதி நிகழ்வில் இலங்கையிலிருந்து சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் கொழும்பு மாவட்ட ஆணையாளர் சரத் தயானந்தா, சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் குருநாகல் மாவட்ட உதவி ஆணையாளர் மல்லிகா ஹேரத் , சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிப் உட்பட 15,16,17,18 வயது சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவன உறுப்பினர்கள் பெற்றோர்கள் என 22 பேர் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :