ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏலத்தில் 233 வீரர்கள்

ழாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 5 வீரர்களை மட்டும் தக்க வைத்துவிட்டு மற்றவர்களை விடுவிக்கும்படி ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது. 

இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் 5 முன்னணி வீரர்களை தக்க வைத்துக் கொண்டன.

சென்னை அணியில் அணித்தலைவர் டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா,அஸ்வின், வெய்ன் பிராவோ ஆகியோர் தொடருகிறார்கள். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 வீரர்களையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலா 2 வீரர்களையும் வைத்துக் கொண்டது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி மட்டும் ஷேவாக் உள்பட எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பாமல் அனைவரையும் கழற்றி விட்டது.

அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள், ஐ.பி.எல். அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர்கள் மற்றும் புது வரவுகள் அனைவரும் ஏலம் விடப்படுகிறார்கள்.

பெங்களூரில் வருகிற 12 மற்றும் 13 அம் திகதிகளில் ஏலம் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 10 நாடுகளை சேர்ந்த 233 வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள்.

இவர்களுக்கு ரூ.30 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1½ கோடி, ரூ.2 கோடி வீதம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முந்தைய சீசன்களில் அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏலத்தொகை மதிப்பிடப்பட்டது.

இந்த தடவை, முதல் முறையாக இந்திய ரூபாயின் மதிப்பில் வீரர்கள் விற்கப்பட இருக்கிறார்கள். தேசிய அணியில் இடம் பிடிக்க போராடி வரும் ஷேவாக், யுவராஜ்சிங்,யூசுப் பதான், தினேஷ் கார்த்திக் உள்பட 11 இந்தியர்களுக்கு அதிகபட்ச அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :