நியூசிலாந்திடம் 24 ரன்னில் தோல்வி - இஷாந்த்சர்மாவை சேர்த்தது தவறு - கங்குலியின் கருத்து

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 24 ரன்னில் தோற்றது.

இந்த தோல்வி தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கங்குலி இஷாந்த்சர்மா தேர்வு குறித்து விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

இஷாந்த்சர்மா சீனியர் பவுலர் ஆவார். அதிக அனுபவம் பெற்ற அவரால் நேர்த்தியுடன் பந்துவீச முடியவில்லை. நெருக்கடியில் இருக்கும் அவர் தொடர்ந்து ரன்களை வாரி கொடுத்து வருகிறார். அவர் அணியில் தொடர்ந்து நீடித்து வருவது எனக்கு இதுவரை புரியவில்லை. தொடர்ந்து அவரை அணியில் சேர்த்து இருப்பது தவறானது.

இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி முதுகெலும்பாக உள்ளார். இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பவுலர் அவர் என்பதில் சந்தேகம் இல்லை.

வீராட் கோலி உலகின் சிறந்த ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை. உலகின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஒருநாள் போட்டிக்கான அணியில் புஜாரா, ஜாகீர்கான் சேர்க்க வேண்டும். நியூசிலாந்து போன்ற ஆடுகளங்களில் அவர்களது பணி முக்கியத்துவம் பெற்று இருக்கும். டெஸ்ட் அணியில் இடம் பெற்ற அவர்களை தேர்வு குழுவினர் ஒருநாள் போட்டியிலும் சேர்த்து இருக்க வேண்டும்.

பவுலிங்கை பொறுத்த வரை ஜாகீர்கான் கண்டிப்பாக தேவை. டெஸ்ட் போட்டியில் 30 ஓவர் வீச முடிந்தால் அவர் ஒருநாள் போட்டியில் 10 ஓவர் வீச முடியாதா? தேர்வு குழுவினர் இதை சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :