பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேராவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மஹரகமவிலுல்ல தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது இலங்கை இளைஞர்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.அத்துடன் ஏப்பிரல் மாதம் இலங்கையில் இடம்பெறும் சர்வதேச இளைஞர் மாநாடு தொடர்பாகவும் இருதரப்பினரும் கருத்துக்களை பரிமாறிகொண்டதாகவும் மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா மேலும்
தெரிவித்தார்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளருக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கியமை விசேட அம்சமாகும்
இச்சந்திப்பின் போது மன்றத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்
0 comments :
Post a Comment