இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 232 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தொடக்க நாளில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் கவ்ஷல் சில்வா தனது முதலாவது சதத்தை அடித்தார். மூன்று முறை அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்ததன் பலன் அவரது செஞ்சுரி ஆசை நனவாகியிருக்கிறது. கவ்ஷல் சில்வா 139 ரன்களில் (244 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்துள்ளது. கருணா ரத்னா 53 ரன்னிலும், சங்கக்கரா 75 ரன்னிலும், தற்காலிக விக்கெட் கீப்பர் சன்டிமால் 40 ரன்னிலும், லக்மல் ரன் ஏதுமின்றியும் ஆட்டம் இழந்தனர். மஹேலா ஜெயவர்த்தனே 42 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இலங்கை அணி இதுவரை 143 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
0 comments :
Post a Comment