மன்னாரில் இதுவரை 39 மனித எலும்புக் கூடுகள் மீட்பு

ன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து மனித எலும்புக்கூடுகளை மீட்கும் நடவடிக்கை இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

குறித்த மனித புதைகுழியிலிருந்து தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்படுவதாக அநுராதபுரம் வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியர் தனஞ்சய வைத்தியரட்ண தெரிவித்தார். 

தற்போது வரை 39 மனித எலும்புக் கூட்டு பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி மன்னார் - மாந்தை திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் நீர் குழாய் திருத்த பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் இந்த மனித எலும்புக்கூடுகளை கண்டுள்ளனர். 

இதன் பின்னதாக குறித்த ஊழியர்களினால் பொலிஸருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து எலும்புக்கூடுகளை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

எவ்வாறாயினும் இதுவரை மேற்கொண்ட அகழ்வின்போது முழுமையான மனித எலும்புக்கூடு எதுவும் மீட்கப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :