வடமேல் மாகாணத்தில் தமிழ் மொழிப் பாடசாலையில் 481 வெற்றிடங்கள் நிலவுகின்றன.





இ. அம்மார்-

டமேல் மாகாணத்தில் தமிழ் மொழிப் பாடசாலையில் 481 வெற்றிடங்கள்
நிலவுகின்றன. இதுவொரு பாரிய பிரச்சினையாகும். இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நான் இந்த கல்வி அமைச்சுப் பொறுப்பில் இருப்பதில் எந்தவிதமான அர்த்தமுமில்லை. எனவே அவரச அவசியமான தீர்வு எட்டப்பட வேண்டும். 

அதற்குரிய வழிவகைகளைத் தேடி இந்த ஆசிரியர் வெற்றிடங்கள் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரிய ஜயசேகர தெரிவத்தார் வரலாற்றில் முதற் தடவையாக குருநாகல் மாட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலை அதிபர்களின் கூட்டம் வடமேல் மாகாண கல்விப் பணிமனையின் பணிப்பாளர் ஜே. ஜீ. என்.
திலக்கரத்ன தலைமையில் 28-01-2014 இன்று நடைபெற்றது. 


அந்நிகழ்வில் அதிபர்மார்கள் முன் வைத்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர அங்கு இதனை இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
வடமேல் மாகாணமான குருநாகல் , புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மாஹோ கல்வி வலயத்தில் 35 ஆசிரியர் வெற்றிடங்களும் நிகவெரடிய வலயத்தில் 5 ஆசிரியர் வெற்றிடங்களும், ஹிரிஉல்ல கல்வி வலயத்தில் 33 ஆசிரியர் வெற்றிடங்களும், குளியாப்பிட்டிய கல்வி வலயத்தில் 27 ஆசிரியர் வெற்றிடங்களும், இப்பாகமுவ கல்வி வலயத்தில் 26 ஆசிரியர் வெற்றிடங்களும், குருநாகல் கல்வி வலயத்தில் 53 ஆசிரியர்கள் வெற்றிடங்களும், சிலாபம் கல்வி வலயத்தில் 160 ஆசிரியர்கள் வெற்றிடங்களும் புத்தளம் கல்வி வலயத்தில் 162 வெற்றிடங்களும் உள்ளன. இவ்வெற்றிடங்கள் யாவும் பட்டதாரிகளின் நியமனங்கள் ஊடாக நிவர்த்தி செய்யப்படும். அதேவேளை புத்தளம் மாவட்டத்திலுள்ள ஆசிரியர்கள்

வெற்றிடங்கள் தொடர்பாக கல்வி அமைச்சர் பந்துல குனவர்தனவுடன் நான் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக 2005 ஆம் ஆண்டு முதல் சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை நிரந்தரமாக்க சகல அங்கிகாரங்களும் பெறப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்து தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கும் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

 தத்தம் பாடசாலை
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இதனைப் பெற்றுக் கொள்ளமுடியும்.


இக்கதிரை மற்றும் மேசை பற்றாக்கு குறை நிலவுகின்றன. இந்த பிரச்சினை நீண்ட காலவருடங்களாக உள்ளன.

 எனவே இதனை உடன் நிவர்த்தி செய்யுமாறு கல்விப் பணிப்பாளரை வேண்டிக் கொண்டார்.

ஆசிரியர் இடமாற்றங்கள் சரியான மதிப்பீட்டின் அடிப்படையில் இடம்பெற வேண்டும்.

தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் மட்டத்தில் இடம் பெறும் ஆசிரியர் இடமாறற்றங்கள் மிகுந்த கவனத்துடன் மேற் கொள்ளப்பட வில்லை எனச் சுட்டிக காட்டப்பட்டது அதேபோன்று வடமேல் மாகாணத்திற்குரிய தமிழ் மொழிப் பிரிவுக்கான பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்படப்பட வில்லை எனச் சுட்டிக் காட்டப்பட்டது.

 அவருக்கு முழு அதிகாரங்களையும் வழங்கி தமிழ் மொழிப் பிரிவில் காணப்படும் நிர்வாக ஒழுங்கு முறைகளை நடத்திச் செல்ல வழிவகுக்க
வேண்டும் இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, புத்தளம் நகர முதல்வர் கே. எம். ஏ. பாயிஸ். குருநாகல் நகர சபை உறுப்பினர் அப்துல் சத்தார், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் முஹமட் தஸ்லிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :