ஐ.தே.க. சார்பில் கொழும்பில் 5தமிழர் மற்றும் 5முஸ்லிம்கள் - கட்சி வட்டாரங்கள் தெரிவிப்பு


மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபான்மை கட்சிகள் பல தனித்துப் போட்டியிடவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி பத்து சிறுபான்மை வேட்பாளர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ஐந்து தமிழ் வேட்பாளர்களும் நான்கு அல்லது ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் இவ்வாறு கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நடைபெற்று வருகிறது. சுமார் 75 சதவீதமான வேட்பாளர் தெரிவு நிறைவடைந்துள்ளதுடன், எஞ்சியவர்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன, மத பேதமின்றி அனைத்து மக்களையும் அரவணைத்துக் கொண்டு செயற்படும் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி. சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் அநீதியிழைக்கப்பட்ட போது அவற்றைத் தடுப்பதற்கு நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பியவர்கள் நாமே.

எம்மோடு கைகோர்த்திருக்கும் சிறுபான்மை மக்களை பிளவுபடுத்துவதற்காக இன்று பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கோள்ளப்படுகின்றன. அவற்றையெல்லாம் வெற்றிகொள்ளும் வகையில் எமக்குத் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

இந்த அரசாங்கத்தைப் போல சிறுபான்மை மக்களை கௌரவப்படத்தும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளவில்லை. மேற்கொள்ளப் போவதுமில்லை. ஆகையினாலேயே அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆசனப் பங்கீட்டில் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து கட்சியை வெற்றி பெறச் செய்யும் அதேவேளை, உங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு விருப்புவாக்கினை வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :