5 பிள்ளைகளின் தந்தையான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்- அதிர்ச்சித்தகவல்

-tw-
பிரதமர் டி.எம். ஜயரத்ன கம்பளையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது, காவி உடை அணிந்த பிக்கு ஒருவர் திருமணம் செய்த 5 பிள்ளைகளின் தந்தை என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.

பிரதமர் வெளியிட்ட தகவலின் படி அந்த பிக்கு ஜாதிக ஹெல உறுமயவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் என பிரதமரின் அலுவலகத்தின் உட்தரப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பிட்டியில் இருக்கும் ஒரு தேரருக்கு 5 பிள்ளைகள் இருப்பதாக பிரதமர் கூறியிருந்தார். இதனடிப்படையில் கம்பஹா மாவட்டம் சிங்கப்பிட்டியில் ரத்ன தேரரின் குடும்பம் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், மாலை நேரங்களில் தனது வீட்டுக்கு டெனிம் காற்சட்டை அணிந்து செல்வது வழக்கம் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

பிரதமர் வெளியிட்ட இந்த தகவலின்படி அத்துரலியே ரத்ன தேரரின் விடயங்கள் வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே, பிரதமரின் அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்திய சிங்கள ராவய அமைப்பினர் தற்பொழுது கைது செய்யப்பட்டு வருவதாகவும் பேசப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :