-எம்.எம்.ஜபீர்-
12 கௌனி 2 ஆம் வட்டாரம் ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 11 பேர் கொண்ட 10 ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி இன்று (2014.01.26) 5ஆம் கௌனி அமிர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டிக்கு தெரிவான 6ஆம் கௌனி றோயல் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வீரத்திடல் அல்-அறபா விளையாட்டுக் கழகம் மோதியது. நாணையச் சுழச்சியில் வெற்றி பெற்ற அல்-அறபா விளையாட்டுக் கழகம் களத்தடுப்பில் ஈடுபட்டனர்.
முதலில் துடுப்படுத்தாட களம் இறங்கிய 6ஆம் கௌனி றோயல் விளையாட்டுக் கழகம் 8.3 ஓவர்களுக்கு சகல விக்கட்களையும் இழந்து 53 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய வீரத்திடல் அல் - அறபா விளையாட்டுக் கழகம் 8.5 ஓவர்களுக்கு 4 விக்கட்களை இழந்து 56 ஓட்டங்களை பெற்று மேலதிக 3 ஓட்டங்களால் வீரத்திடல் அல் - அறபா விளையாட்டுக் கழகம் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபக தலைவரும்; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச கொள்கைபரப்பு செயலாரும் மெஸ்ரோ அமைப்பின் பிரதேச அமைப்பாளருமான ஏ.எம்.மஹ்ருப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரபல தொழில் அதிபரும் மைஹெப் நிறுவனத்தின் தவிசாளருமான லயன் சித்திக் நதீர், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எஸ்.றிஸ்வி யஹ்சன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச உயர் பீட உறுப்பினர் ஏ.சீ.நிஸார் ஹாஜி, 12 கௌனி, 2 ஆம் வட்டாரம் கைரியா ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் ஐ.அலியர், வீரத்திடல் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது பிரபல தொழில் அதிபரும் மைஹெப் நிறுவனத்தின் தவிசாளருமான லயன் சித்திக் நதீருக்கு சமூக சேவையை பாராட்டி ப்ரண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபக தலைவரும்; ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச கொள்கைபரப்பு செயலாரும் மெஸ்ரோ அமைப்பின் பிரதேச அமைப்பாளருமான ஏ.எம்.மஹ்ருபினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment