6–வது ஐ.பி.எல். போட்டியால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.385 கோடி லாபம்

ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பல்வேறு வகையில் வருமானத்தை குவித்து வருகிறது.

அணி ஒப்பந்தம், டெலிவிசன் விளம்பரம் உள்பட பல வழிகளில் பணத்தை அள்ளுகிறது. இதேபோல ஐ.பி.எல். போட்டி மூலமும் கனிசமான பணம் குவிகிறது.

கடந்த ஆண்டு (2013) நடத்தப்பட்ட 6–வது ஐ.பி.எல். போட்டி மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.385.36 கோடி லாபம் கிடைத்து உள்ளது.

சென்னையில் நேற்று நடந்த பி.சி.சி.ஐ.யின் நிதிக்கமிட்டி கூட்டத்தின் மூலம் இது தெரியவந்ததாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

2012–ம் ஆண்டை விட பி.சி.சி.ஐ.க்கு ரூ.210 கோடி கூடுதலாக லாபம் கிடைத்து உள்ளது. 2012–ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டி மூலம் 174.73 கோடி லாபம் கிடைத்தது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகரின் மருத்துவ செலவுக்கான தொகை ரூ.5.33 லட்சம், வெளிநாட்டில் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றதற்காக மனோஜ் திவாரியின் மருத்துவ செலவு ரூ.26 லட்சம் ஆகியவற்றுக்கு பி.சி.சி.ஐ.யின் நிதிக்குழு ஒப்புதல் அளித்தது.

இதேபோல தெண்டுல்கருக்கு ரூ.3.55 லட்சம், பிரவீன்குமாருக்கு ரூ.3.72 லட்சம் மருத்துவ செலவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) லாபத்தில் அதிகமான தொகையை கேட்பது பற்றி முடிவு செய்யப்படும்.

7–வது ஐ.பி.எல். போட்டி பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :