கச்சத்தீவு அருகே கடந்த டிசம்பர் 24–ந் தேதி மற்றும் ஜனவரி 2, 21–ந் தேதிகளில் தமிழக மீனவர்கள் 69 பேர் 16 படகுகள் மூலம் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை கைது செய்து அந்த நாட்டு ஜெயிலில் அடைத்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த அந்த 69 மீனவர்களையும் நேற்று முன்தினம் இலங்கை கோர்ட்டு விடுதலை செய்து உத்தரவிட்டது. அதேபோல் பிடிபட்ட படகுகளும் விடுவிக்கப்பட்டது.
நேற்று அந்த மீனவர்கள் மற்றும் 15 படகுகளை இந்திய கடலோர காவல் படையினரிடம் சர்வதேச கடல் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் ஒப்படைத்தனர். இன்று காலை 8 மணியளவில் 69 மீனவர்களும் இந்திய கடலோர காவல்படை கப்பல் ‘விக்ரகா’ மூலம் காரைக்கால் மார்க் துறைமுகம் வந்தடைந்தனர்.
விடுதலையாகி தாயகம் திரும்பிய 69 மீனவர்களையும் நாகை கலெக்டர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அந்த மீனவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி தழுவி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு அந்த மீனவர்கள் தங்களுடைய உறவினர்களுடன் சொந்த ஊருக்கு திரும்பினர்.

0 comments :
Post a Comment