மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டுப் பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை அகற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளையும் அண்மித்து விசேட பொலிஸ் நடவடிக்கைப் பிரிவு ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெரும்பாலான முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்று ஃபெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment