லெபனானில் தஞ்சம் புகுந்த சிரியா அகதிகளின் எண்ணிக்கை 8.80 லட்சமாக உயர்வு

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார்.

ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

பல லட்சம் மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதில், அண்டை நாடான லெபனானுக்கு வரும் சிரியா அகதிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. சொந்த நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக இருக்கும் வேளையில் சிரியாவில் இருந்துவந்து தஞ்சமடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக உள்ளதால் அகதிகளின் பராமரிப்புக்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என லெபனான் பிரதமர் மிச்சேல் சுலைமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றைய நிலவரத்தின்படி, ஐ.நா. அகதிகள் உயர் கமிஷனில் பதிவு செய்து லெபனானில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள சிரியா மக்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 80 ஆயிரத்து 63 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 ஆயிரத்து 700 பேர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிரியாவை விட்டு வெளியேறி லெபனானில் அடைக்கலம் தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :