வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் பலத்த பாதுகாப்புடன் சபை அமர்வில் பிரசன்னம்!



நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டானியல் றெக்சியன் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வடமாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் ஊர்காவற்றுறை நீதிதவானின் பணிப்பிற்கமைவாக வடமாகாணசபை அமர்வில் இன்றைய தினம் கலந்துகொண்டார்.

கடந்த நவம்பர் மாதம் மேற்படி நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் புங்குடுதீவு பிரதேசத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மேற்படிச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கமலேந்திரன் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொளளப்பட்டபோது மாகாணசபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக கமலேந்திரன் கேட்டிருந்த அனுமதியினை நீதிபதி வழங்கியிருந்தார்.

இதற்கமைவாக இன்றைய தினம் சபை அமர்வுகளில் கமலேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.

இதற்காக மாகாணசபை சுற்றாடலில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், சபைக்கும் பொலிஸ் மற்றும் சிறைச்சாலை பாதுகாவலர்களின் பாதுகாப்புடனேயே கமல் அழைத்து வரப்பட்டிருந்தார்.(LW)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :