மக்களிடையே ஏற்படும் இனப்பிரச்சினைக்கு கைகொடுத்தவர் ஜனாதிபதியும் அவரது சகோதரரும்- ஹரீஸ்

-பி.எம்.எம்.ஏ.காதர்-

மது நாட்டில் எத்தகைய தேசிய இனப்பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை முறியடித்து சிறுபாண்மை தமிழ். முஸ்லிம் மக்களுக்கு கைகொடுத்துக் காப்பாற்றுகின்றவர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் அமைச்சர் பஷீல் ராஜபக்ஷ அவர்களும் இருப்பது எமக்கு ஆறுதலாக இருக்கின்றது. என திகாமடுல்ல மாவட்டப்பாராளுமன்ற உறுபினரும் கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனைக் கல்வி வலயத்தில் 64 வது பாடசாலையாகவும் மருதமுனையில் 8 வது பாடசாலையாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலை'யை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நேற்று முன்தினம் (20-01-2014) திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாரு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எம்.எல்.எம்.மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்த பாடசாலைத் திறப்பு விழாவில் விஷேட அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரீ.எல்.அப்துல் மனாப், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார். கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.சி.எம்.தௌபீக் எஸ்.எம்.அமீர், ஹாதி நீதிபதி என்.எம்.இஸ்மாயில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். உமர் அலி, ஷம்ஸ் அதிபர் ஏ.ஆர். எம்.தௌபீக் உள்ளிட்ட ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பெரும் தொகையானோர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் உரையாற்றுகையில்:-

சிறுபிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக ஆரம்பப் பாடசாலைகளை அமைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றார். இதனால் கல்முனைப் பிரதேசத்தில் பல ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முடிந்திருக்கின்றது.

எவ்வாரான நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதற்கு முகம்கொடுத்து கல்வி அபிவிருத்திக்கும். உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் எமது ஜனாதிபதி முன்னுரிமை கொடுத்து வருகின்றார்.

2020ம் ஆண்டளவில் இந்த நாட்டில் வறுமையை இல்லாமல் செய்வதற்காக சமுர்த்தித் திட்டத்தை 'திவிநெகும' என்ற வாழ்வின் எழுச்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தி அடிமட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்கு சிறந்த பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து மக்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.

இந்த நாட்டின் அபிவிருத்திக்கு தலைமை தாங்குகின்ற அமைச்சர் பசீல் ராஜபக்ஷ அவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதேசம் என்று வேற்றுமை பார்க்காமல் மிகவும் நிதானமாகவும், நியாயமாகவும் அபிவிருத்திக்கான நிதியை ஒதுக்கி வருகின்றார்.

ஹலால் பிரச்சினை வந்தபோது மிகவும் தைரியமாக நின்று எங்களுக்கு கைகொடுத்தவர் பசீல் ராஜபக்ஷ அவர், சிறுபாண்மை மக்கள் மீது அதிக அக்கறை காட்டி செயற்படுகின்றார்.

எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கு முகம் கொடுத்து இப்பிரதேச மக்களின் நலனுக்காகவும். அபிவிருத்திக்காகவும் என்னை அர்ப்பணித்துச் செயற்படுவேன். நான் முன்னெடுக்கின்ற பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற அதிகாரிகளுக்கும், உத்தியோகத்தர்களுக்கம் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸூக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் இதேவேளை பாடசாலைக்கு பல பொருட்கள் அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :