சாம ஸ்ரீ சமூக சேவையாளர் தேசிய விருது வழங்கும் விழா -படங்கள்










எம்.ஐ.பிர்னாஸ் - தைக்காநகர்-

கில இன நல்லுறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சாம ஸ்ரீ சமூக சேவையாளர் தேசிய விருது வழங்கும் விழா நேற்று மாலை (19.01.2014) பிற்பகல் 1.00 மணியளவில் மாத்தறை ஹக்மன பௌத்த வித்தியாலயத்தில் நடைபெற்றது

ஆகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் சாம ஸ்ரீ ஆனந்த சரத் மலவர ஆராச்சி தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வியாபார பிரதி அமைச்சர் ஹேமால் குணசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 150 பேருக்கு சாம ஸ்ரீ விருதுகளை வழங்கி வைத்தார்.

இவ் அமைப்பினால் கடந்த இருபத்தொரு வருட காலமாக சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் சமய கலை கலாசார ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய விருது பெற்றவர்களில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.றாசீக் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக கணக்காளர் கே.றிஸ்வியஹ்ஸர், அட்டாளைச்சேனை அல்-ஜெஸீறா வித்தியாலய அதிபர் சமூக சேவையாளர் ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தர் சமூக சேவையாளர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஜௌபர், சின்னப்பாலமுனை உப தபாலதிபர் ஊடகவியலாளர் எஸ்.எம்.ஹனீபா, மைக்கோப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தொழிலதிபருமான சித்தீக் நதீர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும், ஊடகவியலாளருமான ஐ.எச்.ஏ.வஹாப், உட்பட பலர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :