கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் செயற்திறனை வலுப்படுத்த ஆசிய மன்றம் நிதி உதவி!



அஸ்லம் எஸ்.மௌலானா-

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜீத் அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் செயற்திறனை வலுப்படுத்துவதற்கும் கிழக்கு மாகாணத்திற்கு என தனியான சுற்றாடல் கொள்கை ஒன்றை வகுப்பதற்குமான பூர்வாங்க திட்டத்திற்கு ஆசிய மன்றம் நிதி அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

இதன் முதற் கட்டமாக இருபது இலட்சத்து ஐம்பத்தி ஐயாயிரம் ரூபாவினை ஆசிய மன்றம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜீத் மற்றும் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரின் முன்னிலையில் முதலமைச்சரின் செயலாளரும் மாகாண உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களினால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் அரச, தனியார் துறை பங்காண்மையினை விருத்தி செய்வதல், கிழக்கு மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னோடியான தகவல்கள் அடங்கிய ' செங்கோல்' பத்திரிகையினை வெளியிடுதல், துணை விதிகளை அச்சிடுதல், முத்திரை வரியினை உள்ளுராட்சி மன்றங்கள் பெற்றுக் கொள்ளும் நடைமுறையினை இலகுபடுத்துதல். மாவட்ட மட்ட மீளாய்வுக் கூட்டடங்களை நடத்துதல் உள்ளிட்ட முக்கிய செயற் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அதேவேளை கிழக்கு மாகாணத்திற்கு என தனியான சுற்றாடல் கொள்கை ஒன்றினை வகுக்கும் செயற் திட்டத்திற்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களின் தொழில் நுட்ப ரீதியான உதவிகளும் பெறப்படவுள்ளது.

இவற்றிற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண பேரவைச் செயலகம் ஒன்றினை அமைப்பதற்கான வரைபடங்களுடன் கூடிய செயற் திட்ட அறிக்கையினை தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :