கிழக்கு மாகாண சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது அமர்வு கிழக்கு மாகாண எழுத்தர் ( குமாஸ்தா) பணி நியமனம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, இன்று காலவரையின்றி ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் கூடவிருந்த சபை அமர்வு, சபை முதல்வரால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வாசக அட்டைகளுடன் சபைக்கு முன்பாக அமர்ந்து சபையை கூட்டுமாறு கோரி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண சபை அமர்வு, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா. துரைரெத்தினம் முன் வைத்த கிழக்கு மாகாண அரசு பணியாளர் நியமனம் குறித்த அவசர பிரேரணையொன்றை விவாதிப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாகவே கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு எழுத்தர் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்த பல தமிழர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இன்று காலை சபை கூடுவதற்கு முன்னதாக சபைத் தலைவர் ஆரியவதி கலப்பதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அமர்வின் நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராய்ந்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இரா.துரைரெத்தினம் , ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மஞ்சுள பெர்னான்டோ ஆகியோர் சமர்ப்பித்த விசேட பிரேரணைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் தேனீர் இடை வேளையின் பின்பு பிரேரணைகள் பற்றி ஆராய்வோம் எனக் கூறி அவைத்தலைவர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஒத்தி வைத்ததாகக் கூறப்படுகின்றது..
சபை அமர்வு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சமர்ப்பித்த தனி நபர் பிரேரணை தொடர்பாக அவைத்தலைவர் அறிவித்த போது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் செயல் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து சில நிமிடங்கள் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறி சென்றதையடுத்து தேனீர் இடை வேளைக்காக சபை ஒத்தி வைக்கப்பட்டது.
தேனீர் இடை வேளையின் பின்பு சபை கூடிய போதிலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபைக்கு மீண்டும் வராததால், சபையை அவைத்தலைவர் கால வரையறையின்றி ஒத்தி வைத்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு முன்பாக அமர்ந்து பதாகைகளை ஏந்தியவாறு சபை ஒத்தி வைப்பிற்கு எதிரப்பு தெரிவித்தும் ,சபையைக் கூட்டுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபையை மீண்டும் கூட்டுவதற்கு 'கோரம்' ( தேவையான குறைந்த பட்ச உறுப்பினர்கள் ) போதாமையால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சபையை தான் ஒத்திவைத்ததாக அவைத்தலைவர் ஆரியவதி கலப்பதி இது தொடர்பாக கூறுகின்றார்.

0 comments :
Post a Comment