மண்முனை வாவிக்கு மேலால் சேவையில் ஈடுபடும் ஒரு இயந்திரம் இடைநிறுத்தம் மக்கள் அவதி-படங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய திணைக்களத்தினால் கிழக்கில் படுவான்கரையயும் - எழுவான்கரையையும் இணைக்கும் முகமாக மன்முனை வாவிக்கு மேலால் சேவையில் ஈடுபடும் இரு இயந்நிர படகுகளில் ஒரு படகுப் பாதை ஜனவரி மாதம் 3 மூன்றாம் திகதியிலிருந்து 20-01-2014 இன்று வரை படகுப்பாதை புதிய கொந்தராத்து காரர் மாறிய காரணத்தால் சேவையில் ஈடுபடாமல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாளாந்தம் பாதையை பயன்படுத்தும் பிரயாணிகள்; விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் இவ் இயந்திர படகுப்பாதையை தினமும் பயன்படுத்தும் ஆசிரியர்கள்,அரச, அரச சார்பற்ற திணைக்களங்களின் ஊழியர்கள்,அங்காடி வியாபாரிகள், பொது மக்கள் பல அசௌகரியங்களுக்கும் ,இன்னல்களுக்கும் ஆளாகிவருவதாகவும் பிரயாணிகள் விசனம் தெரிவிப்பதோடு பாடசாலை மற்றும் காரியாலயங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் குறித்த விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக செயற்படும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரயாணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக நாளாந்தம் பாதையை பயன்படுத்தும் பிரயாணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ஜனவரி மாதம் 3ஆம் திகதியலிருந்து சேவையில் ஈடுபடாமல் இருக்கும் பாதையை மிக அவசரமாக சேவையில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு மண்முனைப் பாலத்தின் அபிவிருத்தி வேலைகள் நிறைவு பெறும் வரை இப் பாதை போக்குவரத்து சேவையை இடை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :