பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தின் நிர்மாண வேலைகள் தற்போது முடிவுறும் தறுவாயில் காணப்படுவதாக அப் பால நிர்மானப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
பல்லாண்டு காலமாக விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கில் படுவான்கரையயும் -எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனை பால வேலைத்திட்டம் தற்போது துரித கதியில் இடம்பெற்று முடிவுறும் தறுவாயில் காணப்படுகின்றது.
ஜப்பான் அரசாங்கத்தின் 1473 மில்லியன் ரூபா நன்கொடை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 397 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த பால நிர்மாண வேலைகள் பூர்த்தியடைந்து 2014 மே மாதமளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்; திறந்து வைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணப்பட்ட மண்முனை படுவான்கரை மற்றும் எழுவான்கரை மக்களின் மிக நீண்ட காலக் கனவு மஹிந்த சிந்தனையின் பிரதிபலிப்பினூடாக நனவாகவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரையையும் -படுவான்கரையையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தின்அபிவிருத்தி வேலைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தற்போதுமுடிவுறும் தறுவாயில் இடம்பெற்று வருவதை எம்மால் அவதானிக்கமுடிகிறது.
இரண்டு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 210 மீற்றர் நீளமும் 9.8 மீற்றர் அகலமும் கொண்ட மண்முனைப் பாலம் மற்றும் மேற்குப்பக்கம் 195 மீற்றர் கிழக்கு 293 மீற்றர் நீளம் கொண்ட தாம்போதி மட்டக்களப்பு வாவிக்கும் குறுக்காக அமைக்கப்படுவதன் மூலம் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்கள் இணைக்கப்படும்.
குறித்த பாலம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட பின்னர் படுவான்கரை மக்கள் மட்டக்களப்பிற்கு மேற்கொள்ளும் போக்குவரத்து மிக இலேசாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment