எம்.பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை ஆலங்குளம் அக் - றஹ்மானியா வித்தியாலயம் ஆரம்பித்த காலத்திலிருந்து முதன்முதலாக சாதாரண தர வகுப்பு மாணவர்களின் அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.சீ.எம்.முஸம்மில் தலைமையில் இன்று (30) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்.மனாப், ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஜெயரூபன், ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எல்.மன்சூர், என்.எம்.சம்சுதீன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது அக்கரைப்பற்று சின்னப் பள்ளிவாசல் இமாம் ஏ.சீ.எம்.ஐயூப் மௌலவியினால் விஷேட தூஆப் பிரார்த்தனையோடும், ஆசிரிய ஆலோசகர் என்.எம்.சம்சுதீனால் புதிய வகுப்பு மாணவர்களின் வரவை வரவுப் புத்தகத்தில் வரவு வைத்தும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment