வெள்ளிப் பதக்கத்ததையும் வெண்றெடுத்த மாணவனுக்கு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு பாராட்டு

பழுலுல்லாஹ் பர்ஹான்-


ந்திய அழைப்பிதல் விழையாட்டு நிகழ்வில் 100 மீற்றர் ,200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கங்களையும் 4 பேருக்கு -100 அஞ்சல் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப் பதக்கத்ததையும் வெண்றெடுத்த பின்தங்கிய யமுனுகம கெகிறாவவையை சொந்த ஊராக் கொண்ட மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பாடசாலை மாணவன் ரிம்.எம்.சகீத் அவர்களுக்கு எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம் என ஓ.எஸ்.ஏ. காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினது தலைவரும், சமூக சேவையாளருமான இல்மி அஹமட்லெவ்வை தெரிவித்தார்.

இவரின் அயராத முயற்சியாலும் இறைவனது அருளாலும் இவ் வெற்றியினை அடைந்து இவரது தாய் மண்ணுக்கும் அவர்கற்ற பாடசாலைக்கும் பெருமையினையும் பெற்றுக் கொடுத்து மகிழ்ச்சி வெள்ளத்தால் மூழ்கி இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் காத்தான்குடி சமுக மதிப்பீட்டுக்கான அமைப்பு வறிய அநாதை மாணவர்களது வாழ்வியல் மேம்பாட்டுக்காக வலிந்துதவி வருகின்ற சமூக சேவை இயக்கம் என்ற ரீதியில் இவரது வெற்றியில் பெரும் மகிழ்வினை நாமும் அடைந்து கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

அத்துடன்; பெற்றோரை இழந்த .இவ் ஏழை மாணவனது எதிர்காலம் செழித்தோங்கவும் மேலும் விளையாட்டுத்துறையிலும் கல்வியில் இன்னும் பல சாதனைகளை அடைந்து முழு முஸ்லிம் சமூகத்துக்கும்,அவரது சொந்த கிராமமான யமுனுகமவிற்கும் பெருமையினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என எல்லாம் வல்ல அழ்ழாஹ்வைப் பிராத்திக்கின்றோம்.

அத்துடன் அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்த இவ் அநாதை ஏழை மாணவனை பல்வேறுபட்ட துன்ப துயரங்களுக்கு மத்தியில் பயிற்று வித்து சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்தி வியக்கச்செய்த பாடசாலைச் சமூகத்துக்கும் எமது பாராட்டுக்களையும் அனுப்பி வைக்கின்றோம். என இல்மி அஹமட் லெவ்வை மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :