பள்ளிவாசலை தாக்கிய சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு – வழக்கை வாபஸ் பெற தீர்மானம்!

ண்டி அம்பதென்னை முல்லேகம மஸ்ஜிதுல் பலா முஸ்லிம் பள்ளிவாசலை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கண்டி நீதி மன்றம் முன் ஆஜர் செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பு வழங்குதற்கும் இது சம்பந்தமான வளக்கை வாபஸ் வாங்குவதற்கும் 2014 01 19 மாலை இடம் பெற்ற இரு சாராரும் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் பௌத்த மக்கள் சார்பில் வண: கொண்டதெனியே பியதஸ்ஸீ தேரர், வண: படுகொட சங்கிச்சாயன தேரர், வண: இராஜாங்கனை சோரத தேரர், வண: முல்லேகம பியரத்ன தேரர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், முஸ்லிம்கள் சார்பில் கண்டி நகர ஜமமியதுல் உலமா சபையின் தலைவர் மவ்லவி பஸ்லுல் றஹ்மான், அக்குறணை ஜம்மியதுல் உலமா சபையின் மவ்லவி முஸம்மில், அககுறணை அஸ்னா மத்திய பள்ளியின் நிர்வாக சபையின் தலைவர் சட்டத்தரனி அஸ்மி பாரூக், உற்பட பலர் கலந்து கொண்டனர்.

முல்லேகம் பிரியதர்ஷனாராம விஹாரையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் பள்ளி வாயலை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதென முஸ்லிம் தரப்பினர் அறிவித்தனர். இவ் இளைஞர்கள் அறியாத்தனமாக இச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இப் பிரதேசத்தில் வாழும் எந்த ஒரு சிங்களவரோ பௌத்த தேரரோ இச் செயலை ஆதரிக்க வில்லை எனவும் பல நூற்றாண்டு காலமாக முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழும் இப் பிரதேசத்தில் இவ்வாரான ஒரு செயல் இடம் பெற்றுள்ளதை வன்மையாக அவர்கள் கண்டிப்பதாகவும் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தேரர்கள் சுற்றிக் காட்டினர்.

இருதியில் இரு சாராரும் ஏற்றுக் கொண்டவாரு இச் சம்பவத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வறவும் இதண் பின் இவ்வாரான செயல்கள் இடம் பெறாதிருப்பதற்கு தேவையான நடவக்கைளை மேற்கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

பள்ளிவாயலுக்கு ஏற்பட்ட சேதத்தை நிவர்த்தி செய்வதற்காக தேவையான செலவுகளை ஏற்றுக்கொள்ள பௌத்த தரப்பினர் முன் வந்த போதும் முஸ்லிம் தறப்பினர் அதனை மறுத்துவிட்டனர். எதிர்வரும் 21 ம் திகதி இச் சம்பவம் சம்பந்தமாக வழக்கை விசாரணை இடம் பெறவுள்ளதால் அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக் கடிதம் ஒன்றில் இரு சாராரும் கைச்சாத்திட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :