ஆசியாவின் ஆச்சரியம் இன்று ஜெனீவாவில் கேள்விக்குறியாகிவிட்டது - ஐ.தே.க.

சியாவின் ஆச்சரியம் இன்று ஜெனீவாவில் கேள்விக்குறியாகிவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிப்பதை விடவும் நாட்டின் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் திகதி தீர்மானிக்க முன்னரே அரசாங்கம் தேர்தல் சட்டத்தை மீறி­ விட்டது. அரசாங்கத்தின் தேர்தல் அராஜகம் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் ஸ்ரீ கொத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதாகக் கூறி இன்று இலங்கையை போதைப்பொருள், ஆட்கடத்தல், இராணுவ அடக்கு முறை போன்ற சர்வாதிகார மற்றும் துஷ்பிரயோக நாடாக மாற்றி ஆசியாவிலேயே ஆச்சரியமிக்க நாடாக மாற்றிவிட்டது. வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஆட்சியை நடத்தும் அரசாங்கமாக மஹிந்த ராஜபக் ஷ குடும்ப அரசாங்கமாக மாறிவிட்டது.

இன்று இலங்கையில் இடம்பெற்று வரும் பிரச்சினைகள் மற்றும் சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனத்திற்கொள்ளாது வழமைபோன்று ஐக்கிய தேசியக் கட்சியை குறை கூறிக்கொண்டிருக்கின்றது. அரசாங்க­ த்தின் செயற்பாடுகள் ஜெனீவா மாநாட்டின் பின்னர் தெரிய வரும்.

மாகாண சபை தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் அரசாங்கம் இப்போதே தேர்தல் சட்டத்தினை ஆரம்பி­ த்துவிட்டது. அரச வாகனங்களையும் ஊழியர்களையும் பயன்படுத்தி தேர்தல் வேலைகளில் ஈடுபட தென் மாகாண அரசாங்க உறுப்பினர்கள் ஆரம்பித்துவிட்டனர். அதேபோல் தென் மாகாண மற்றும் மேல் மாகாண முதலமைச்சர்கள் யார் என்பதில் தற்போதே அரசாங்க உறுப்பினர்கள் மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இத்தேர்தலிலும் அரசாங்கம் அவர்களது தேர்தல் ஊழல் கைவரிசையினை காட்ட ஆரம்பித்துவிட்டனர். அர­ சாங்கம் எதைச்செய்து மாயை காட்டினாலும் மக்கள் தமது நிலைப்பாட்டினை வெளிக்காட்டுவார்கள். இம்முறை மாகாண சபை தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி தேர்தலின் நிலையினை தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :