கூலிக்கு கொலை செய்யும் குழு.
நீர் கொழும்பு சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் செல்போன்கள் மூலம் வழி இயக்கி வந்த கூலிக்கு கொலை செய்யும் குழுவை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://lankacnews.com/sinhala/news/109091/
காலி வட்டரெக்க பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் வழி நடத்தப்பட்டு வரும் இவர்கள் நாட்டின் பல பிரதேசங்களுக்கு சென்று கூலிக்கு கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஒரு லட்சம் ரூபா அல்லது இரண்டு லட்சம் ரூபா பணத்தை கொடுத்தால் எந்த பிரதேசத்திற்கு சென்றும் கொலை செய்ய வேண்டிய நபரை இவர்கள் கொலை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாத்தறை துடாவே பிரதேசத்தில் விலங்கு பண்ணை ஒன்றின் உரிமையாளரான மஞ்சு லக்ஷான் என்பவர் கடந்த 11 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 2 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு சந்தேக நபர்கள் இந்த கொலை செய்துள்ளனர்.
ஹெரோயின் போதைப் விற்பனையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர். அவரை கைது செய்ய பண்ணையின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த கூலிப்படையினரால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும் விலங்கு பண்ணை உரிமையாளரை கொலை செய்ய 2 லட்சம் ரூபா பேரம் பேசப்பட்டுள்ளதுடன் அதில் 40 ஆயிரம் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
0 comments :
Post a Comment