ஒருவழிப் பாதையில் மாத்திரம் போக்குவரத்தினை மேற்கொள்ளும் புதிய போக்குவரத்துத் திட்டம்

த்தளை நகர எல்லைக்குள் ஒருவழிப் பாதையில் மாத்திரம் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பரீட்சார்த்த நடவடிக்கை இன்று காலை 06 மணிமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வத்தளை நகரில் நாளாந்தம் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இன்றைய தினம் முழுவதும் இந்த பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய, நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் வத்தளை, நில்மினி சந்தியில் வலதுபுறமாகத் திரும்பி, பழைய நீர்கொழும்பு வீதியினூடாகப் பயணித்து, அல்விஸ் டவுன் பகுதியில் பிரதான மார்க்கத்திற்குள் பிரவேசிக்க முடியுமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் அல்விஸ் டவுன் பகுதியில் இருந்து நில்மினி சந்தி வரையில் பிரதான வீதியின் இருவழிகளிலும் பயணிக்கமுடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நில்மினி சந்தியில் இருந்து அல்விஸ் டவுன் வரையான பகுதியில் அமைந்துள்ள அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு நீர்கொழும்பில் இருந்து செல்வோர் நில்மினி சந்தியில் திரும்பி, பழைய நீர்கொழும்பு வீதியின் ஊடாகவே பயணிக்க வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :