நீங்கள் சவூதி அரேபியவில் தொழில் புரிகிறீர்களா இதனைக்கட்டாயம் படியுங்கள்.

நீங்கள் முன்பு வேலை செய்த நிறுவனம் உங்களது இக்காமாவை புதிப்பிக்கவில்லையா? இக்காமா திகதி காலாவதி ஆகிவிட்டது. பாஸ்போர்ட்டும் தர மறுக்கிறாரா? நீங்கள் நல்ல வேலை தேடிக் கொண்டு பழைய கபிலின் (உரிமையாளர்) அனுமதியின்றி புதிய நிறுவனத்தில் உங்களை மாற்றிக் கொள்ளலாம். MOL மூலம் தனாசில் மாறியபின் தூதரகத்தின் மூலம் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Domestic Labor: வீட்டு பணியாளர்கள் (ஹவுஸ் டிரைவர், வீட்டு துப்புவு பணியாளர், வீட்டுப் பணிப் பெண் ஆகியோர்) நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களது இக்காமா புதுப்பிக்கப்படாமல் விட்டு விட்டார்களா? அல்லது அந்த விஷா வில் வெளியில் வேலை பார்த்ததில் ஹூரூப் கொடுக்கப்பட்டுள்ளதா? வேறு கபில் மூலம் மீண்டும் வீட்டு பணிக்கு செல்ல நேரடியாக ஜவாஸத் மூலம் உங்கள் தகுதியை மாற்றிக் கொள்ளலாம்.
அல்லது கம்பெனிகளுக்கு மாற வேண்டுமா? லேபர் ஆபிஸ் MOL மூலம் பச்சை வண்ண நிறுவனங்களுக்கு மாறிக் கொள்ளலாம். 

எந்தக் கட்டணமும் கிடையாது. ஊருக்கு செல்ல வேண்டுமா? எந்த கட்டணமும் நிபந்தனையும் இல்லாமல் ஊருக்குச் செல்லலாம்… July 3, 2008 க்கு முன்பு ஹஜ் உம்ரா விசாவில் வந்து தங்கியவர்கள். தங்களது நிலையை மாற்றிக் கொள்ளலாம்.

வீட்டுப் பணியாளர்களாக பணியாற்ற நேரடியாக ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளலாம். நிறுவனங்களில் வேலைக்குச் சேர விரும்புபவர்கள் முதலில் லேபர் ஆபிஸ் அதன் பின் ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளலாம். 

ஊருக்குப் போக விரும்புபவர்கள் எந்த தண்டனையும் கட்டணமும் இல்லாமல் தாயகம் செல்லாம். வேறு விஷாவில் மீண்டும் திரும்பி வர எந்த தடையும் இல்லை…

ஹவுஸ் டிரைவர்கள் தங்களது புரோபசனலை எந்த கட்டணமும் இன்றி மாற்றிக் கொள்ளலாம். நேரடியாக ஜவாஸத் சென்று மாற்றிக் கொள்ளுங்கள். சகோதரர்களே! Custodian of the Two Holy Mosques King Abdullah bin Abdulaziz அவர்கள் வழங்கி உள்ள இந்தச் சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

சலுகை காலத்திற்குப் பின் கெடுபிடிகள் கடுமையாக இருப்பதுடன், கடுமையான தண்டனையும் 2 ஆண்டு சிறைவாசம் 1 இலட்சம் ரியால் வரை அபராமும் விதிக்கப்படும். 

எச்சரிக்கை சகோதரர்களே…. இந்த விபரங்கள் எதுவும் தெரியாமல் கிராம பகுதிகளில் வாழும் நம் சகோதரர்களை நினைக்கும் போது நெஞ்சு கனக்கிறது…. சகோதரர்களே உங்களால் முடிந்தவரை நம் தேசத்தவர்கள் அனைவருக்கும் இந்த தகவலை எடுத்துச் செல்லுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு நற்கூலிகளை வழங்குவான். இந்த செய்தியை உங்கள் பக்கங்களில் Share பன்னிவிடுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :