மட்டக்களப்ப்பில் அத்துமீறி பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்ற நடவடிக்கை -ஜாகன பண்டார

ந.குகதர்சன்-

ட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க காணிகளில் தரை காணிகளில் அத்துமீறி பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜாகன பண்டார தென்னக்கோன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் மற்றும் செங்கலடி பிரதேச எல்லைப்புற மேய்ச்சல் தரை மற்றும் வன பரிபாலன காணிகளில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அத்துமீறி பயிர்ச் செய்கைகளிலும், விவசாயத்திலும் ஈடுபட்டு வருவதால் கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரைக்கு கால்நடைகளை அனுப்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேய்ச்சல் தரைகளில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு, கால்நடைகள் காணாமல் போகுதல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டு கப்பம் பெறுதல் போன்ற பிரச்சனைகளை தாம் எதிர்நோக்கி வருவதாக கால்நடை வளர்ப்போர் தெரிவித்தும் வருகின்றார்கள்.

சில வருடங்களாக தொடரும் இந்த பிரச்சனை குறித்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் முன் வைத்து இதற்கான தீர்வு விரைவில் காண வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கையும் முன் வைத்திருந்தார்.

இதனையடுத்து ஆராய்வற்காக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சில் செவ்வாய்கிழமை அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் கூட்டிய விசேட கூட்டத்திலே அமைச்சரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காணி அமைச்சு, காணித் திணைக்களம், வனத்துறை திணைக்களம், பிரதேச செயலாளர்கள் உட்பட உரிய அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவும் அழைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவிக்கையில்!

மட்டக்களப்பு மாவட்ட கால்நடைகளுக்காக சுமார் அறுபது ஆயிரம் ஏக்கர் மேய்ச்சல் தரை காணி என அடையாளமிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படாமை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட இந்த கூட்டத்தில் முதற்கட்டமாக குறித்த காணிகளில் அத்துமீறி பயிர் மற்றும் வேளான்மை செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு உடனடியாக வெளியோற்றுமாறும், வெளியேற மறுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் கேட்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :