எம்.வை.அமீர், எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.ஐ.சம்சுதீன், அஸ்லம் எஸ்.மௌலானா-
செல்வாக்கு, இனம், அரசியல் என்ற கட்டுப்பாடுகளை தாண்டி கல்முனை மாநகரின் முன்னேற்றத்துக்காக ஆசியான் மன்றம் அறிமுகப்படுத்தவுள்ள ‘பொது மக்கள் புள்ளியிடல் அட்டை’ நிகழ்ச்சித்திட்டத்தை கல்முனை மாநகர பிரதேச எல்லைக்குள் அமுல்படுத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம்
காரியப்பர் தெரிவித்தார்.
இன்று மாலை (2014-01-27)சாய்ந்தமருது சீ வீறீஸ் ஹோட்டேல் கூட்ட மண்டபத்தில் ஆசியான் மன்ற நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தலைமையில் இடம்பெற்ற ‘பொது மக்கள் புள்ளியிடல் அட்டை’
நிகழ்ச்சித்திட்டத்தை கல்முனை மாநகர பிரதேச எல்லைக்குள் அமுல்படுத்துவது சம்மந்தமாக கல்முனை மாநகர முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை விழிப்பூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர், மாநகரசபை உறுப்பினர்களான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் ஏ.எல்.எம். முஸ்தபா, எம்.எஸ். உமர் அலி, எம்.ஐ.எம்.பிர்தௌஸ்,எம்.எச்.எம்.நபார்,ஏ.எம்.றியாஸ்,ஏ.அமிர்தலிங்கம்,ஏ.விஜயரத்தனம்,வீ.கமலநாதன், எஸ்.ஜெயகுமார் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, ஆசியான் மன்றத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் கலாநிதி கோபகுமார் தம்பி,பிரதிப்பணிப்பாளர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகளான எம்.ஐ.எம்.வலீத், றிசாட் சரீப்,சாள்ஸ் சசிகரன் போன்றோரும் கல்முனை மாநகர எல்லையில் வசிக்கும் பிரதான சமூகநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்குகொண்டிருந்தனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் நிஸாம் காரியப்பர் தான் முதல்வராக பதவியேற்றதன் பின்னர் கல்முனை மாநகரின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு பல்வேறுபட்ட உதவிவழங்கும் தொண்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த வரிசையில் ஆசியான் மன்றம் கல்முனை மாநகர அபிவிருத்திக்கு மிகுந்த துணை சக்தியாக அமையக்கூடிய பொது மக்களின் நேரடியான கருத்துக்கை அறியக்கூடிய மிகுந்த தொழில்நுட்பத்துடன் கூடிய ஜீ.பீ.எஸ் தொழில்நுட்பத்துடன் செயப்படவுள்ள (e Citizen Report Cards) எனும் நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தி, அதனுடாக கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மாநகரின் அபிவிருத்தியில் உச்ச நன்மையை அடைய எதிர்பார்ப்பதாகவும்
தெரிவித்தார்.
‘பொது மக்கள்புள்ளியிடல்அட்டை’ நிகழ்ச்சித்திட்டம் (e Citizen Report Cards)
சம்மந்தமான உண்மையான நிலையை இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் மக்களுக்கு சிறந்த முறையில் தெளிவு படுத்த வேண்டும் என்றும் கோவில்கள் பள்ளிவாசல்கள் மற்றும் சமூகநிறுவனங்கள் விசேடமாக ஊடகவியலாளர் போன்றோருக்கு தெளிவு படுத்தி பின்னர் அவர்களுடாக மக்கள் தெளிவு பெற்றதன் பின்னர் இத்திட்டம் மக்கள் மத்தியில் அமுல்படுத்தபடுமாக இருந்தால் அதனுடாக கிடைக்கப்பெறும் விபாரங்களிக்கொண்டு கல்முனை மாநகரை உச்ச அபிவிருத்தி நிலைக்கு இட்டுச்செல்லலாம் என்றும் முதல்வர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது ஆசியான் மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபகுமார் தம்பி மற்றும் பிரதிப்பணிப்பாளர் ஏ.சுபாகரன், நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் போன்றோர் பொது மக்கள் புள்ளியிடல் அட்டை’ நிகழ்ச்சித்திட்டம் (e Citizen Report Cards) தொடர்பாகவும் அதனை அவர்கள் நடைமுறைபடுத்திய பிரதேசங்களில் பெற்ற அனுபவங்களையும் நன்மைகளையும் எடுத்துக்கூறினார். எதிர்காலத்தில் இத்திட்டம் தொடர்பாக சமூகக்குழுக்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் தெளிவு
படுத்தியதன் பின்னர் இத்திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment