நஸீப் முஹம்மட் -
அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையில் சிசு உதான கணக்கினைப் பேணி கடந்த வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களுக்கு பரிசளிக்கும் வைபவம் இன்று(27) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது மக்கள் வங்கியின் பிரதி முகாமையாளர் எம்.ஐ.எஹியா, பிரதி அதிபர் ஏ.எல்.அன்வர், வங்கியின் உதவி முகாமையாளர் எம்.பி.எம்.அன்வர் மற்றும் பிரதி அதிபர்களான எஸ்.எல்.எம்.நசீர், எம்.சி.சரீனா உம்மா, ஏ.கே.நியாஸ் மற்றும் உதவி அதிபர்களான ஏ.எல்.அப்துல் பத்தாஹ், எம்.ஏ.அபுதாஹிர், வலயத்தலைவர் எம்.எல்.மௌபூர், கற்பித்த ஆசிரியர்ளான ஏ.எல்.அப்துர்றஹ்மான்,எம்.ஏ.சி.சுஹையிர்,எம்.ஏ.சலாஹுதீன்,எம்.வை.சம்ஹுதீன் மற்றும் அட்டாளைச்சேனை மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த வருடம் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற முப்பது மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அதிபர் ஏ.எல்.அன்வர் குறிப்பிடுகையில் சமூகத்திலுள்ள நிறுவனங்கள் பாடசாலை மாணவர்களுக்காக உதவிகள் வழங்க முற்படுகின்றபோது வருமானம்; குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் நன்மை பெறுகின்றனர்.
இவ்வாறாக மக்கள் மனங்களை அறிந்து செயற்படும் மக்கள் வங்கி மாணவர்களுக்காக பல்வேறு செயற்திட்ட உதவிகளை வழங்கி வருவது பாராட்டத் தக்க விடயமாகும்.
இதன் மூலம் மாணவர்கள் நன்மை பெறுவது மட்டுமன்றி எதிர்காலத்தில் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கும் உந்துதல் சக்கியாகவும் விளங்குகின்றது என்றார்.
0 comments :
Post a Comment