கோவாவில் நடைபெற்ற 12 நாடுகள் பங்கு பெறும் விளையாட்டுப் போட்டியில்( Lusofonia Games Goa- 2014) 4×100 ஓட்ட நிகழ்வில் நேற்றைய தினம் (24.01.2014) இலங்கை சார்பாக பொத்துவில் புதல்வன் அஸ்ரப் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இலங்கைக்காக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்து பொத்துவில் மண்ணிற்கு சர்வதேசத்தில் பெறுமையீட்டித்தந்துள்ளார்.
இலங்கைக்காக சர்வதேசத்தில் பதக்கம் ஒன்றை பெறவேண்டும் என்ற தனது நீண்டநாள் கணவு நனவாகியுள்ளததாக அஸ்ரப் தெரிவித்தார் அத்துடன் தமது வெற்றிக்கு பங்களிப்புச்செய்த ஒவ்வொருவருக்கும் தாம் கடமைப்படடுள்ளதாகவும் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பொத்துவில் நெற் தொடர்பு கொண்டு வாழ்துத்தெரிவிக்கும் போது அஸ்ரப் குறிப்பிட்டார்.
பொத்துவிலுக்கும் தாய் நாட்டிற்கும் பெருமையீட்டித்தந்த அஸ்ரப் இற்கு பொத்துவில் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பொத்துவில் நெற் பெருமைப்படுகின்றது.
பொத்துவில் மத்திய கல்லுாரின் பழைய மாணவரான இவர் பல்வேறு சாதனைகளுக்கு செந்தக்காரர். இவரின் ஆரம்பகால பயிற்றுவிப்பாளர் எம் எஸ் சலீம் ஆசிரியராவார்
பொத்துவில் புதல்வனின் சாதனைகளில் சில…..
2012ம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அஸ்ரப் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றிருந்தார்.
தியகம மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 23வது தேசிய இளைஞர்
விளையாட்டுப் போட்டியில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
100 மீற்றர் ஓட்டத்தில் 11.00 செக்கன்களில் ஓடி முதலாமிடத்தையும், 200 மீற்றர் ஓட்டத்தில் 22.20 செக்கன்களில் ஓடி முதலாமிடத்தையும் பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்திரந்தார்.
தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடம் பெற்றிருப்பது வரலாற்றில் இதுதான் முதற்தடவையாகும்.
2011ம் அண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் ஒரு அம்சமான ஆண்களுக்கான 100மீற்றர் மற்றும் 200 மீற்றர், 4 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டிகளிலும் அஸ்ரப் முதலாம் இடத்தினைப் பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை மக்ஹெய்சர் விளையாட்டு மைதாணத்தல் நடைபெற்ற கிழக்கு மாகா விளையாட்டு விழாவில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்திய ஏ.எல்.எம். அஷ்ரப் மெய்வல்லுனர் போட்டியிலேயே சம்ரியனாகத் தெரிவாகியிருந்தார்.
இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றதோடு, குருநாகலில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு தின விளையாட்டு விழாவில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பொத்துவில் பிரதேசம் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமமாகும். இந்தப் பிரதேசத்திலிருந்து அவ்வப்போது பல சாதனையாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். அந்த வகையில் விளையாட்டுத்துறையில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம். அப்துல் மஜித் ரக்பீ விளையாட்டில் தேசிய அணியில் இடம் பிடித்து விளையாடியதோடு அந்த அணிக்கு தலைமை தாங்கியும் உள்ளார்.
கிழக்கு மாகாணமே அறியாத, அங்கு விளையாடப்படாத ரக்பீ விளையாட்டில் பொத்துவிலைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி. அப்துல் மஜித் தேசிய அணியில் விளையாடியது முழுக் கிழக்கு மாகாணத்திற்கே இன்று வரை பெருமை தரும் விடயமாகும். அந்த வகையில் பொத்துவில் மத்திய கல்லூரியிலிருந்து இலங்கையின் அதிவேக இளம் ஓட்ட வீரராக ஏ.எல்.எம். அஷ;ரப் இன்று இனம் காணப்பட்டுள்ளார்.
அஸ்ரபின் வெற்றி இன்று முழுக் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை தரும் விடயமாக மாறியுள்ளது. அவரது வெற்றியை பாராட்டுவதோடு, எதிர்காலத்தில் அஸ்ரப் முதலாமிடம் பெற்று சாதனைனை படைக்க வேண்டும் என வாழ்த்துவோம்.
0 comments :
Post a Comment