அமைச்சர் றிசாத் இஸ்ரேல் நாட்டுடன் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டதாக போலி குற்றச்சாட்டு

-வவுனியா மாவட்ட இனநல்லுறவு ஒன்றியம்-

மைச்சர் றிசாத் பதியுதீன் இஸ்ரேல் நாட்டுடன் உடன்படிக்கையொன்றில் கையொப்பமிட்டதாக ஆங்கில பத்திரிகையொன்றில் வெளியான செய்தி தொடர்பில் சில வங்குரோத்து அரசியல் சக்திகள் இணையத்தளங்களையும்,பேஸ் புக்களையும் பயன்படுத்தி அநாகரிகமான முறையில் செய்திகளை வெளியிட்டுவருவது கண்டனத்துக்குரியது என வவுனியா மாவட்ட இனநல்லுறவு ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வவுனியா நகர சபையின் முன்னால் உறுப்பினரும்,ஒன்றியத்தின் தலைவருமான அப்துல் பாரி இது குறித்து வெளியிடடுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது –

கடந்த இரு தினங்களுக்க முன்னர் வெளியான ஆங்கில நாளேடு ஒன்றில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இஸ்ரேல் நாட்டுடன் ஒரு உடன் படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் என செய்தி வெளியாகியிருந்தது.இது தொடர்பில் பத்திரிகை நிறுவனத்துடன் எமது அமைப்பினர் தொடர்பு கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்,இந்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் விளக்கமொன்றினையும் அளித்ததுடன்,இது தொடர்பில் அமைச்சரின் ஊடகப் பிரிவும் அறிக்கையொன்றியனை வெளியிட்டுள்ளது தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம்.அதன் பின்னர் அந்த ஆங்கிலப் பத்திரகை இன்றைய பதிப்பில் செய்தி தொடர்பிலான பிழைத் திருத்தததை பிரசுரித்திருந்தது.

இது குறித்து அமைப்பின் தலைவர் அப்துல் பாரி அளித்துள்ள விளக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –

அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த நாடடின் செயற் திறமை மிக்க சமூக மற்றும் சகோதர இன உறவுக்கு மதிப்பளித்து செயற்படக் கூடிய ஒருவர் என்பதை சகலரும் அறிந்துள்ளனர்.அமைச்சர் அவர்களின் அயராத மக்கள் சேவைக்கும்,தமது நாட்டுக்கும்,மக்களுக்கும் விசுவாசமாக நடப்பதால் சர்வதேச தரப்படுத்தலில் முக்கிய முஸ்லிம் தலைவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம்,பெரும் மதிப்பை எமது நாட்டுக்கு பெற்றுத்தந்துள்ளார்.

இதனை பொருத்துக் கொள்ள முடியாத சில பிற்போக்குவாத அரசியல் தலைமைகள் ஆங்கில பத்திரிகை யொன்றில் பிழையாக பிரசுரிக்கப்பட்ட செய்தியின் உண்மைத் தன்மையினை அலசி ஆராயாமல்,முஸ்லிம் சகோதரர் என்ற உணர்வின்றி அநியாயத்தையும்,அபாண்டங்களையும் சொல்லி அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை சமூகத்தின் மத்தியில் குறைத்து காட்டுவதன் மூலம்,நடைபெறப் போகும் மேல் மாகாண சபை தேர்தலில் அதீத வாக்குகளை பெற்றுக் கொள்ளும் ஒரு சதித்திட்டத்தை சில இணையத்தளங்களை பயன்படுத்தி மேற்கொண்டுவருகின்றனர்.

தற்போது காணப்படும் நெருக்குவாரங்களுக்கு மத்தியில் பொறுப்பற்ற அரசியல் தலைமைகளால் முஸ்லிம் சமூகமும்,தமிழ் சமூகமும் சந்திக்கும் இன்னல்களுக்கு மத்தியில் பிழையான செய்தியொன்றின் அடிப்படையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை அரசியல் ரீதியாகவும்,சமூகத்தின் மத்தியில் அவரை பிழையான ஒருவராக அடையாளப்படுத்த எடுக்கும் செயற்பாடுகள் கவலையளிக்கும் ஒன்றாகும்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை பொறுத்த வரையில் பாதிக்கப்பட்ட மக்கள் எங்கு வாழ்ந்தாலும்,அவர்களுக்கு தேடிச் சென்று பணியாற்றும் நல்லர குணத்தை கொண்ட எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு தேசிய அரசியல் தலைவராக பரினமித்துள்ளார்.அவரது செயற்பாடுகளால் கவரப்பட்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் அவரது தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததுடன்,மாகாண ,நகர,பிரதேச சபைகளின் உறுப்பினர்காளகவும்,பிரதி தலைவர்களாகவும்,தலைவர்களாகவும் உள்ளனர்.

இவற்றை பொருத்துக் கொள்ள முடியாத பிற்போக்கு சிந்தணைக் கொண்டவர்கள் சமூகத்தில் பிளவினை ஏற்படுத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன் மக்களுக்கு செய்யும் எண்ணற்ற பணிகளை முடக்கி அதன் மூலம் தாங்கள் அரசியல் பிழைப்பு நடத்த முயற்சிக்கின்றனர்.

எனவே வதந்திகளை பரப்பி தமக்கு தாமே அசிங்கமான முகவரியினை உருவாக்கும் இவ்வாறனவர்கள்,இந்த செய்தி தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் அல்லது அவரது அமைச்சின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உண்மைத்தன்மையினை கேட்டறிந்து கொள்ள முடியும் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :