சரத் பொன்சேகா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையூறு



னநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சார கூட்டங்களை நடாத்த உள்ளுராட்சி மன்றங்கள் அனுமதியளிப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய கட்சிகளுக்கு இடமளித்த போதிலும், ஜனநாயகக் கட்சிக்கு இடமளிக்கப்பட மாட்டாது என உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் நேரடியாகவே தெரிவிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் சர்வாதிகார ஆட்சி நிலவி வருவதாகவும், ஜனநாயகத்திற்கு பாரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சரத் பொன்சேகா தேர்தல் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.(GTN)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :