எம்.எம்.ஜபீர்-
இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்படும் விபத்துக்களில் அதிகமாக பாடசாலை மாணவர்கள் பலியகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் அம்பாரை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வீதி விபத்துக்கள் தொடர்பாக அறிவூட்டும் நிகழ்வு இன்று (27) சவளக்கடை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எஸ். பத்திரண தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் த.சிவயோகன், கெப்சோ நிறுவனத்தின் தலைவர் ஐ.ஏ.ஜப்பார், கெப்சோ நிறுவனத்தின் சிவில் பாதுகாப்பு இணைப்பாளர் ஏ.சி.எம்.முஹம்மட், சவளக்கடை பொலிஸ் நிலைய மோட்டார் வாகன போக்குவரத்து பொறுப்பதிகாரி கே.எம்.ஆர்.என்.பண்டார, பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களை விபத்தில் இருந்து தடுக்கும் வழிமுறைகள், வீதிசமிச்சைகள், விபத்துக்கள் ஏற்படுவதற்கான நிலைமைகள், நடைபெறும் முறைகள், மற்றும் பாதசாரிகள் கடவையை கடக்கும் முறைகள் தொடர்பான வீடியோக் காட்சிகளும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன் விபத்துக்கள் தொடர்பாக அம்பாரை மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் த.சிவயோகனால் மேலதிக விளக்கங்களும் அளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment